Don't Touch My Phone secure your mobile device Tamil

 இது மிகவும் ஒரு அருமையான அப்ளிகேஷன் ஆகும்.


இது உங்கள் தொலைபேசி திருட்டு போகாமல் பாதுகாப்பாக இருக்க கூடிய ஒரு சிறந்த அப்பிளிகேஷன் ஆகும்.


இது நீங்கள் உங்களுடைய தொலைபேசியை எங்கேயாவது சார்ஜ் போட்டு விட்டோ அல்லது எங்கேயாவது வைத்து விட்டோ நீங்கள் சென்றால் அந்த மொபைலை யாராவது எடுத்தால் அது உடனே ஒரு அலாரம் ஒலியை எழுப்பும் அவ்வாறு உங்களுடைய தொலைபேசி ஒலியை எழுப்பும்பொழுது நீங்கள் உடனே சென்று உங்களுடைய தொலைபேசியை பார்க்கலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய தொலைபேசி தொலைந்து விடாமல் பாதுகாப்பாக இருக்கும்.

இப்போது இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

முதலில் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும் டவுன்லோட் செய்து உங்கள் தொலைபேசியில் இன்ஸ்டால் செய்யவும்.

இன்ஸ்டால் செய்துவிட்டு ஓபன் செய்தவுடன் அதில் START என்று இருக்கும்.

அதன் கீழ் இருக்கும் ஆப்ஷன்களை இப்போது பார்க்கலாம்.

1. Custom alarm
2. PIN Code
3. Charger alarm
4. Settings


இவ்வாறு நான்கு ஆப்ஷன்கள் கீழே இருக்கும்.

CUSTOM ALARM

இது உங்கள் மொபைலை யாராவது எடுக்கும்பொழுது அதில் ஒலிக்கக் கூடிய ஒலியை உங்களுக்கு விருப்பப்பட்ட முறையில் மாற்றி வைப்பதற்கு இது உபயோகப்படுகிறது.

PIN CODE

யாருக்காவது உங்களுடைய தொலைபேசியில் உள்ள கடவுச்சொல் (password) தெரிந்திருந்தால் இதில் ஒலிக்கக் கூடிய அந்த ஒலியை நிறுத்த முடியும். ஆனால் நீங்கள் இந்த அப்ளிகேஷனை ஒரு கடவுச்சொல்லை (password) போட்டு பாதுகாப்பாக யாருக்கும் தெரியாமல் வைக்க இது உபயோகப்படுகிறது.

CHARGER ALARM

இது உங்களுடைய தொலைபேசியை நீங்கள் சார்ஜ் செய்யும் பொழுது எங்கேயாவது வைத்துவிட்டு செல்வீர்கள் அந்த சமயம் இந்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்து விட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள சார்ஜர் அலாரம் என்பதை செலக்ட் செய்துவிட்டு ஸ்டார்ட் என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் சார்ஜ் போட்டு விட்டு செல்லலாம் அந்த தொலைபேசியில் இருந்து யாராவது சார்ஜரை கலட்டி விட்டால் இந்த அலாரம் ஒலிக்க ஆரம்பிக்கும் அப்போது நீங்கள் கவனித்துக் கொள்ள முடியும்.

SETTINGS

இதை ஓபன் செய்து பார்த்தால் அதனுள் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்.

1. Security
2. Customization


இவ்வாறு இருக்கும் அதில் security என்பதின் கீழே பார்த்தால் மூன்று ஆப்ஷன்கள் குடுக்கப்பட்டிருக்கும் அவை

1. Setup PIN code
2. Fingerprint authentication
3. Charger disconnect Alarm

Setup PIN code

இதில் setup pincode என்பதை முதலில் ஆன் செய்யவும் அப்போது அதில் ஏதேனும் நான்கு எண்களைக் கொண்ட ஒரு கடவுச்சொல்லை (password) உருவாக்கவும்.

Fingerprint authentication

இல்லையென்றால் இரண்டாவதாக Fingerprint authentication என்று இருக்கும் இதனை கிளிக் செய்து உங்களுடைய கைரேகையை பதிவு செய்யவும்.

குறிப்பு : மேலே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை தான் உங்களால் பதிவு செய்ய முடியும்.

Charger disconnect Alarm

அடுத்ததாக Charger disconnect Alarm என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை ஆன் செய்து வைக்கவும் அப்போதுதான் நீங்கள் உங்களுடைய தொலைபேசியை சார்ஜ் செய்யும் பொழுது அலாரம் செட் செய்ய முடியும்.

அதன்பின் Customization என்று இருக்கும் அதன் கீழ் இவ்வாறு நான்கு ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள்.

1. Custom alarm
2. Blinking flashlight on alarm
3. Vibrate on alarm
4. Alarm delay

இவ்வாறு இருக்கும்.

Custom alarm

இதில் முதலில் இருக்கும் Custom alarm என்பதை நாம் ஏற்கனவே மேலே சொல்லி விட்டோம் இது வேறொன்றுமில்லை உங்களுக்கு பிடித்தமான ஒலியை வைப்பதற்கு இது உதவுகின்றது.

Blinking flashlight on alarm

இது அலாரம் ஒலிக்கும் பொழுது தொலைபேசியில் இருக்கக்கூடிய light 🚨 விட்டு விட்டு ஒளிரும் உங்களுக்கு தேவைப்பட்டால் இதனை ஆண் செய்து வைத்துக் கொள்ளவும்.

Vibrate on alarm

இது ஆண் செய்து வைத்திருந்தால் உங்களுடைய தொலைபேசியில் அலாரம் ஒலிக்கும் பொழுது உங்களுடைய போனில் அதிர்வும் சேர்ந்து ஏற்படும் தேவைப்பட்டால் ஆண் செய்து வைக்கவும்.

Alarm delay

இது உங்களுடைய தொலைபேசியை யாராவது எடுத்தால் அதில் ஏற்படக்கூடிய ஒலி எவ்வளவு நேரம் கழித்து ஒலியை எழுப்ப வேண்டும் என்ற ஆப்ஷன் தான் இது. அதனைக் ஆண் செய்தால் அதில்

 5  seconds
10 seconds
15 seconds


இவ்வாறு இருக்கும் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் இதனை செலக்ட் செய்து வைக்கலாம்.

இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு சிறந்த அப்ளிகேஷன் ஆகும்.

இதனை நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும்.

அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

அதனை வீடியோவாக பார்க்க இங்கே உள்ள PLAY பட்டனை கிளிக் செய்யவும்.

இந்த நல்ல தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களுடைய ஈமெயில் மூலமாகவோ அல்லது YouTube comments மூலமாகவோ உங்களுடைய சந்தேகங்களை கேட்கலாம்.

Post a Comment

0 Comments