நண்பர்களே நாம் இந்த பதிவில் உங்களுடைய ஓட்டர் ஐடியுடன் ஆதார் எண்ணெய் எவ்வாறு இணைப்பது என்று நாம் இதில் முழுமையாக பார்க்கலாம்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு இணையதளத்தில் நீங்கள் செல்லவும்.
LINK SCROLL DOWN
அந்த லிங்கினை கிளிக் செய்தவுடன் இது போன்ற ஒரு இணையதளத்திற்கு சென்று விடும் இதில் நீங்கள் ஏற்கனவே இந்த இணையதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதனை வைத்து லாகின் செய்யலாம் இல்லையென்றால் நீங்கள் புதியதாக இந்த இணையதளத்தில் வருகின்றீர்கள் என்றால் மேலே கிரியேட் அன் அக்கௌன்ட் (create an account) என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
இப்போதே இவ்வாறு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் மூலமாகவும் அக்கவுண்ட்டை கிரியேட் செய்ய முடியும் இல்லையென்றால் உங்களுடைய மொபைல் எண்ணை வைத்துக் கூட நீங்கள் அக்கவுண்ட் கிரியேட் செய்து கொள்ள முடியும் உதாரணத்திற்கு உங்களுடைய மொபைல் எண்ணை இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள பாக்சில் கொடுத்தவுடன் வலது புறத்தில் சென்ட் ஒடிபி என்று வரும் அதனை கிளிக் செய்யவும்.
அதனை கிளிக் செய்தவுடன் நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள உங்களுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும் அதனை அடுத்த விண்டோவில் கொடுக்கவும் நீங்கள் ஓடிபி சரியாக பதிவு செய்த பின் வலது புறத்தில் கீழே வெரிஃபை என்று வரும் அதனை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் ஒரு பாஸ்வேர்ட் கிரியேட் செய்ய வேண்டும் முதலில் ஒரு பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும் அதன் கீழே அதை பாஸ்வர்ட்னை கொடுக்க வேண்டும் கொடுத்துவிட்டு சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய பெயர் மற்றும் மற்ற விவரங்களை பதிவு செய்துவிட்டு கீழே சமிட் பட்டனை கிளிக் செய்யவும்.
உங்களுடைய அக்கவுண்ட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது இப்போது முகப்பு பகுதியில் வந்துவிடும்.
இப்போது இந்தப் பகுதியில் ஆதார் லிங்கேஜ் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
அதனை கிளிக் செய்தவுடன் அடுத்த பகுதிக்கு சென்று விடும் அதில் வலது புறத்தில் கீழே let's start என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
இப்போது அடுத்த பகுதிக்கு சென்று விடும் அதில் உங்களிடத்தில் ஓட்டர் ஐடி இருக்கின்றதா இல்லையா என்று கேட்கும் நீங்கள் எஸ் என்பதை கிளிக் செய்யவும் கிளிக் செய்தவுடன் கீழே சிறிய ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும் அதில் உங்களுடைய ஓட்டர் ஐடியில் உள்ள உங்களுடைய ஓட்டர் ஐடி எண்ணெய் பதிவு செய்யவும்.
உங்களுடைய ஓட்டர் ஐடி எண்ணெய் பதிவு செய்தவுடன் Fetch Details என்று வலதுபுறத்தில் இருக்கும் அதனை கிளிக் செய்யவும் இப்போது சிறிது லோட் ஆகி விட்டு கீழே proceed என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
இப்போது இன்னொரு பகுதிக்கு சென்று விடும் அங்கே உங்களுடைய ஓட்டர் ஐடியின் உள்ள அனைத்து விபரங்களும் அதில் காண்பிக்கும்.
இப்போது கீழே save & continue என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
இப்போது அடுத்த பகுதிக்கு சென்று விட்டு சிறியதாக ஒரு பாப் அப் விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு செண்ட் ஓடிபி என்பது கிளிக் செய்யவும் இப்போது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும் அதனை இங்கே பதிவு செய்துவிட்டு வெரிஃபை என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது அடுத்த பகுதியில் இவ்வாறு Detail of person for form – 6B ஒரு ஃபார்ம் ஓபன் ஆகும் அதில் உங்களிடத்தில் ஆதார் எண் இருக்கின்றது என்றால் Yes, I have Aadhaar number என்பதை கிளிக் செய்யவும் நீங்கள் இன்னும் ஆதார் எடுக்கவில்லை என்றால் வேறு ஏதேனும் ஒரு டாக்குமெண்ட் சப்மிட் செய்தால் போதும் அதற்கு I am not able to furnish my Aadhaar Number because i don't have Aadhaar Number என்பதை கிளிக் செய்யவும்.
இதில் ஆதார் எண் இருக்கின்றது என்பதை நாம் இப்போது கிளிக் செய்யலாம் அதனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய ஆதார் கார்டில் இருக்கக்கூடிய ஆதார் எண்ணை பதிவு செய்ய கேட்கும் நீங்கள் அதனை பதிவு செய்யவும் ஆதார் எண்ணை பதிவு செய்த பின் கீழே உங்களுடைய முதல் பெயரில் உங்கள் பெயர் இருக்கும் இரண்டாம் பெயரில் உங்களுடைய இனிஷியலை போடவும் அதனை போட்ட பின் கீழே சேவ் அண்ட் கண்டினியூ என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
அடுத்த பகுதியில் நீங்கள் பதிவு செய்த நாள் முதலில் இருக்கும் அதன் கீழே நீங்கள் தமிழ்நாடு என்பதை தேர்வு செய்யவும் தேர்வு செய்த பெண் கீழே சேவ் அண்ட் கன்டினியூ என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
இப்போது அடுத்த பகுதியில் உங்களுடைய Form-6B வந்துவிடும் அதனை நீங்கள் ஒரு ஸ்கிரீன் ஷாட் அல்லது ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும் அதில் ஏதேனும் எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால் கீழே இடது புறத்தில் எடிட் என்று சொல்லி ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்து நீங்கள் எடிட் செய்து கொள்ள முடியும் எல்லாம் சரியாக உள்ளது என்றால் வலது புறத்தில் சப்மிட் ஏன்டி இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுடைய ஆதார் எண்ணெய் வெற்றிகரமாக உங்களுடைய ஓட்டர் ஐடியுடன் இணைக்கப்பட்டு விட்டது நீங்கள் சப்மிட் செய்ததும் அதை இன்னொரு பகுதிக்கு சென்று அதில் ஒரு நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும் அது மட்டும் இன்றி நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள உங்களுடைய மொபைல் எண்ணிற்கும் ஒரு எஸ்எம்எஸ் வந்துவிடும் அது எதற்காக என்றால் நீங்கள் உங்களுடைய பார்ம் 6B முழுமையாக சப்மிட் ஆகிவிட்டதா என்பதை பார்க்க நீங்கள் அந்த எண்ணை வைத்து ட்ராக் செய்து பார்க்கலாம்.
இதனை வீடியோவாக பார்க்க நீங்கள் கீழே உள்ள பிளே பட்டனை கிளிக் செய்து youtubeல் வீடியோவை முழுமையாக பார்க்கலாம்.
இணையதளத்திற்கு செல்ல வேண்டிய லிங்குகள் :
APP : DOWNLOAD
0 Comments